Pages

Monday, September 24, 2012

கணபதி பப்பா மோரியா.

  நேற்றுதான் எங்கள் வீட்டு கண்பதிபப்பா விசர்ஜன் முடிந்தது. இவ்வளவு நாளாக  கம்ப்யூட்டர் பக்கமே வர நேரமில்லாமல் ரொம்பவே பிசி.இடையில் வெளி ஊருபயணம் வேறு.இன்று வந்துவிட்டேன்.என் மகன் வீட்டில் 5
                                 
தினங்களுக்கு பிள்ளையார் வைத்து பூஜை செய்வார்கள். தினசரி 3 நேரம் பூஜா ஆரத்தி தனி தனி பிரசாதங்கள் நைவேத்யங்கள் எல்லாம் முறைப்படி செய்து வழிபடுவார்கள், சாய்ங்காலவேளைகளில்பஜனைகள் பாட்டுக்கள் அமர்க்களப்படும். சதுர்த்திக்கு 3 மாசம் முன்பெ பிள்ளையார் பொம்மைக்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள்.  சதுர்த்திக்கு முதல் நாள் இரவு பிள்ளையார் பொம்மையை வீட்டுக்கு அழைத்துவருவோம் முறைப்படி ஆரத்தி கற்பூரம் காட்டி வீட்டினுள் அழைப்போம்சதுர்த்தி அன்று காலை 8மணிக்கு பூஜை
                                         
ஆரம்பிக்கனும் என்று காலை 4 மணிக்கே எழுந்து குளித்து மடியாக பிரசாதங்கள் தயார் செய்தோம். நாலுவித பூரண கொழுக்கட்டைகள் அதாவது தேங்காய், கடலைபருப்பு, எள் , உளுந்து என்று நாலுவிதம். வடை, அப்பம்
                               
இட்லி பாயசம் சாதம் பருப்பு அவல் வெல்லம் பலவித பழங்கள் கரும்பு என்று ஒன்றுவிடாமல் வைத்து சிறப்பாக பூஜை நடந்தது. அன்று மாலை மகனின் ஆபீசிலிருந்து மராட்டி பஜன் மண்டலிக்காராவந்து  இரண்டுமணி நேரம் நின்றுகொண்டே அபங்க் பாடல்கள் பஜனை ஆரத்திபாடல்களெல்லாம் பாடினார்கள் இரவு அனைவருக்கும் சாப்பாடு போட்டு தாம்பூல பிரசாதங்கள் கொடுத்து வழி அனுப்பி வைப்போம் அவர்கள் நம்மைப்போல சாம்பார் ரசம் பொரியுல் எல்லாம் சாப்பிட மாட்டாங்க பூரி பாஜி ஷீரா பண்ணிக்கொடுத்தோம்
           இரவு இரைந்துகிடக்கும் பூக்கள் அட்சதைகள் எல்லாம் க்ளீன் பண்ணிவிட்டு நாங்க எல்லாரும் சாப்பிட்டு படுக்க 12  இல்லென 1 மணி ஆகும். மறுபடியும் மறு நா  காலை பூஜைக்கான ஏர்பாடுகள். முதல் நாள் போட்டிருந்த பூமாலைகள் எல்லாம் கழட்டி புது மாலை கட்டி அலங்காரங்கள் செய்து ச்லோகங்கள் சொல்லி பிரசாதம் பண்ணி என்று வீடே திருவிழா கோலத்தில் இருக்கும். அடுத்த நாள் மாலை ஐயப்பா பஜன் மண்டலிக்காரா வந்து
    ரெண்டுமணி நேரம் பஜனைப்பாடல்கள் பாடினார்கள் இரவு அனைவருக்கும் உணவு உபசாரம் செய்து தாம்பூல பிரசாதம் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம் இப்படியே 5 தினங்களுமேபிள்ளையாரை நன்றாக
                                             
கொண்டாடுவோம். வீடே ஊது பத்தி, சாம்பிரானி ,தசாங்கம், பலவிதபழங்கள் பலவித வாசனை மலர்களின் வாசனையால் கோவில் சன்னிதானதினுள் இருப்பது போல ஒரு வைப்ரேஷன் இருக்கும்.அதுவும் இந்தமுறை
                                                 
பிள்ளையார் நேச்சுரலாக அரச மரத்தடியில் அமர்ந்திருப்பதுபோல டெக்கொரேஷன்ஸ் செய்திருந்தோம்.அதுவும் நன்ராக அமைந்து விட்டது.5-
                                           
வது நாள் இரவு பக்கத்தில் இருக்கும் ஒரு லேக்கில் கொண்டுபோய் விசர்ஜன்
                                             
செய்து விட்டு வந்தோம். பிள்ளையார் உக்காந்திருந்த இடமே காலியாக இருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.

Monday, September 17, 2012

கத்தரிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்.
 நிதான அளவில் உள்ள கத்தரிக்காய்கள்.-------    4
 தனியா---------------  2ஸ்பூன்
 கடலைப்பருப்பு------  1 ஸ்பூன்
 சிவப்பு மிளகா வத்தல்---   4
தேங்காய்ப்பூ--------- ஒரு கப்
மஞ்ச பொடி---------  அரைஸ்பூன்
பெருங்காயப்பொடி----- ஒரு ஸ்பூன்
உப்பு----------- தேவையான அளவு
 தாளிக்க  எண்ணை------ 3 ஸ்பூன்
                                   
செய் முறை
 கத்தரிக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
                                                     
தனியா, கடலைபருப்பு மிளகா வத்தலை நன்கு சிவக்க வறுக்கவும்
மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்தேங்காய்ப்பூவையும் சேர்த்து அரைக்கவும்
                                   
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் கத்தரிக்காய் துண்டங்களைச்சேர்க்கவும் மஞ்சபொடி, பெருங்காயப்பொடி உப்பு சேர்க்கவும்
     நன்கு வதங்கியதும் செய்து வைத்திருக்கும் பொடியைச்சேர்த்து 5
                                                   
நிமிடங்களுக்கு நன்கு கிளறி இறக்கவும். சில கத்தரிக்காய்கள் கடுக்கும். அப்போ  வதக்கும் போது கொஞ்சமாக புளித்தண்ணீர் சேர்க்கவும்.அப்போது கடுக்காது.
                                                  

Friday, September 14, 2012

மட்டர் உசல்

பச்சை பட்டாணீயைத்தான் இந்த பக்கம் மட்டர்னு சொல்வா.
 தேவையான பொருட்கள்.
உரித்த பச்சை பட்டாணி-------------- ஒரு கப்
தக்காளிப்பழம்-----------------------   ஒன்று
உருளைக்கிழங்கு------------------ ஒன்று
அரைக்க.
துருவிய தேங்காய்--------------------  ஒரு கப்
பச்சை மிளகாய் ------------------------  4
 உரித்த பூண்டு பற்கள்----------------   10
கொத்துமல்லி தழை------------------ ஒரு சிறிய கட்டு
                                 
மஞ்ச பொடி----------------------------- ஒரு ஸ்பூன்
கரம் மசாலா பொடி----------------- ஒரு ஸ்பூன்
 உப்பு------------------  தேவையான அளவு
செய் முறை
  பட்டாணி, உருளைக்கிழங்கு( சின்ன துண்டங்களாக நறுக்கியது)
                                 
தக்காளிப்பழத்தை ஒரு கப் த்ண்ணீரில் வேக விடவும். பாதி வெந்ததும் மஞ்ச பொடி,கரம் மசாலா பொடி உப்பு சேர்க்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
                               
காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதைச்சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கவும். இதற்கு தாளிப்பு தேவை இல்லை. எண்ணையே சேர்க்காத குருமா வகை இது. தேங்காதுருவலுக்கு பதிலாக கொப்பரைத்துருவல் சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும்
                                                   

Wednesday, September 12, 2012

டிக்கி பாவ்

வடா பாவ் போல டிக்கி பாவ்.பேரனின் பர்த்டேக்கு டிஃபரண்டா ஸ்னாக்ஸ் வேனும்னு சொன்னான். அதான் இப்படி பண்ணிக்கொடுத்தேன்.
தேவையான பொருட்கள் அதிகம் போல தோனும்.செய்யும் விதமும் கொஞ்சம் மெனக்கிடனும். அந்தக்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதை பார்க்கும்போது சிரமம் எல்லாம் போன இடம் தெரியாது. ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
 ஆலு-----------------  அரைக்கிலோ
ப்ரௌன் ப்ரெட் ஸ்லைஸ் -----------   4
அவல்----------------- ஒரு கப்
கார்ன் ஃப்ளவர் மாவு--------  ஒருகப்
ரவை---------------------   ஒரு கப்
பாவ் பன்------------------ 12
கொத்துமல்லித்தழை------------ ஒரு சிறிய கட்டு
 பச்ச மிளகா----------------------  3
பூண்டு பல்லு------------------ 10
இஞ்சி----------------- சிரியதுண்டு
உப்பு தேவையான அளவு
எண்ணை------------- ஒரு கப்
வெண்ணை--------   ஒரு கப்
செய்யும் முறை
                           
 உருளைக்கிழங்கை நன்கு வேக வத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். அவலை அலம்பி மிக்சியில் ஒரு சுற்று சுற்றி கிழங்குடன் சேர்க்கவும் ப்ரெட் துண்டங்களையும் மிக்சியில் தூளாக்கி சேர்க்கவும். மல்லித்தழை பச்சைமிளகாய் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாகப்பிசைந்து கொள்ளவும். ஒரு
                         
                                 
சிரிய ப்ளேட்டில் ரவா கார்ன்ஃப்ளவர் மாவு சேர்த்துகலந்து வைக்கவும்
                                   
கிழங்குகலவையை ஆமவடை சைசில் கைகளில் தட்டி ரவா கார்ன் மாவு
                             
கலவையில் டிப் செய்து சூடான தோசைக்கல்லில் போட்டு சுர்றிலும் 2 ஸ்பூன்
                                       
எண்ணை விட்டு அடிப்பாகம் சிவந்து மொறு மொறுப்பானதும் திருப்பி போட்டு
                           
மறுபடியும் 2 ச்பூன் எண்ணை ஊற்றி நன்கு மொரு மொறுப்பானதும் எடுக்கவும்
                           
பாவ்களை பாதியாக நடுவில் வெட்டி வெண்ணை தடவி தோசைக்கல்லில் போட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்..
                             
சூடுபடுத்திய பாவ்களின் நடுவில்  இருபுறம் ஸாஸ் தடவி நடுவில்  ஆலு.
                                     
                         
                                     
டிக்கிவைத்து பரிமாறவும். குழந்தைகளுடன் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அன்னக்கி 3 கிலோ ஆலு வில் பண்ணினேன். 10- லேந்து 13 வயசுக்குள் இருக்கும் 25 குழந்தைகள் வந்திருந்தாங்க. சூடு சூடாக பண்ணிப்போட்டுட்டே இருக்கேன்  வெளிபக்கம் பன்னின் மெத்தென்ரும் உள்ளே டிக்கியின் மொறு மொறுப்புமாக அமர்க்கள்மான டேஸ்டுடன் இருந்தது. குழந்தைகள் எல்லாருமே ஈசியா 3  4 க்குமேல சாப்பிட்டுட்டே இருந்தாங்க.  கடசில வீட்ல உள்ளவங்களுக்கு எதுமே மிச்சமில்லே

Monday, September 10, 2012

ராய்த்தா

 போனபதிவில் வெஜிடபுல் புலாவுக்கு இந்தராய்த்தா நல்ல காம்பினேஷனாக இருக்கும்னு சொல்லி இருந்தேன்.
 தேவையான பொருட்கள்.
 வெள்ளரிக்காய்--------------  2
 வேர்க்கடலை------------  ஒரு கைப்பிடி
 பச்சமிளகா--------------  2
 கொத்துமல்லித்தழை--------- ஒரு சிறிய கட்டு
புளிப்பில்லாத தயிர்---------  ஒருகப்
உப்பு----------   தேவையான அளவு
                                   
 செய் முறை
 வெள்ளரிக்காய்களை தோல் நீக்கி  கழுவி கேரட் சீவியில் துருவிக்கொள்ளவும். நன்கு கையால் பிழிந்து கொள்ளவும்
                                         
 வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். அத்துடன் மிளகாய் மல்லி சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து தயிரில் கலந்து உப்பு சேர்க்கவும்.
                                           
                               
 வெள்ளரிக்காதுருவலையும் சேர்த்து நன்கு கலக்கவும். வெள்ளரியிலிருந்து பிழிந்து  வைத்திருக்கும் தண்ணியை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறவச்சு முகம் கழுவினா  முகம் கூலாக ப்ரெஷாஇருக்கும் கண்களில் கீழ் உள்ள கரு வளையமும் நீங்கிவிடும்

Friday, September 7, 2012

வெஜிடபுல் புலாவ்

தேவையான பொருட்கள்
 பாஸ்மதி அரிசி------------- 2 கப்
 உரித்த பச்சை பட்டாணி---------- ஒரு கைப்பிடி
 கேரட்-------------------------     4
 உருளைக்கிழங்கு-------------  2
காலிஃப்ளவர்பூவாக உதிர்த்தது-------  ஒரு கைப்பிடி
                                 
 வெங்காயம்----------- 2
 பூண்டு பற்கள் ------- 8
 இஞ்சி -------- சிரிய துண்டு
 கொத்துமல்லி தழை----- ஒரு சிறிய கட்டு
பட்டை------- 2 துண்டு
பிரிஞ்சி இலை--------- 2
 க்ராம்பு--------------     2
 ஏலம்

மிளகு------- ஒரு ஸ்பூன்
ஜீரகம் ------ ஒரு ஸ்பூன்
எண்ணை------- 4 டேபில் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு
செய்முறை
 அரிசியை நன்கு அழுவி அலம்பி வைக்கவும்
காய்களை நிதான அளவில் நறுக்கவும்
                         
பிரஷர் பேனில் எண்ணை ஊற்றி மிளகு, ஜீரகம் பட்டை, பிரிஞ்சி இலை போட்டு
                                       
பொரிந்ததும் அரிசியைப்போட்டு ஈரப்பதம் போக வறுக்கவும். பிறகு நறுக்கி ய
வெங்காயம்  இஞ்சி பூண்டு கொத்துமல்லி சேர்க்கவும் பிறகு நறுக்கி
                               
வைத்திருக்கும் காய்களை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலக்கி
உப்பையும் சேர்த்து மூடவும். பாஸ்மதி சீக்கிரமே வெந்து விடும் 2,அல்லது 3
                                         
விசில் வந்ததுமே அடுப்ப அனைத்து விடவும்.
அந்த புலாவுடன் தொட்டுக்க ராய்த்தா நல்லா இருக்கும் அடுத்த பதிவில் போடுரேன். இப்ப நீளம் அதிகமாயிடுச்சி இல்லியா?
                           
                               
 கொத்துமல்லி வெங்காயம் பூண்டு இஞ்சியை அரைத்து வதக்கி சேர்த்தால் அது தனிச்சுவையாக நன்றாக இருக்கும். இப்படி வதக்கி போட்டாலும் தனிச்சுவையுடன் நன்றாக இருக்கும்.

Monday, September 3, 2012

ஆஹா என்னே சுறு சுறுப்பு

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி எல்லாருமே நிறயா சொல்லிட்டாங்க.
 நா இன்னிக்கு தான் என் வீடு வந்தேன். ஒரு வார்த்தையில் சொல்வதை
 விடஒரு போட்டோமூலம் சொன்னா நல்லா இருக்கும் இல்லியா ?
உண்மையில் சென்னை பதிவர் சந்திப்பையும் சந்தோஷத்தையும் பற்றி
 சில வார்த்தைகளில் சொல்லி விட முடியாது அதுதான் உண்மை. அந்த
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பதிஉலக நண்பர்கள் கடுமையாக
 உழைத்திருக்காங்க. அவர்களுக்குத்தான் நன்றியும் பாராட்டுக்களும்
 வாழ்த்துக்களும் எவ்வளவு சொன்னாலும் போதாது.கலந்துகொண்ட அனைவர்
 முகங்களிலும் அந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் பார்க்க முடிந்தது.
 நான் பங்கு பெற்ற சில போட்டோக்கள் மட்டும் கொஞ்சம் இணைத்திருக்கேன்
                                 
என் வாழ்க்கையில் என்றுமெ மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள்ள வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிச்சுக்கரேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .