Pages

Monday, August 20, 2012

சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழா.


பதிவர் சந்திப்பு நேரலையை வரும் ஞாயிறு 26.8.2012 அன்று காலை 9 மணிமுதல் மாலை ஆறு மணி வரை காணலாம்.

Friday, August 17, 2012

பூரண் போளி

தேவையான பொருட்கள்
 கடலைப்பருப்பு-----------    200 கிராம்
 வெல்லம்------------------ 200 கிராம்
 கோதுமை மாவு--------    2 கப்
 நெய்----------------------- ஒரு கிண்ணம்.
 ஏலப்பொடி-------------- அரை ஸ்பூன்
                                   
 செய் முறை
கடலைப்பருப்பை நன்கு கழுவி தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் 4, 5 விசில் வரும் அளவுக்கு வேக விடவும். ஆவி அடங்கி ஆறியதும்
 குக்கரைதிறந்து  வெந்த பருப்பிலுள்ள தண்ணிரை வடிகட்டியில் வடி கட்டவும்
வடிகட்டிய பருப்பு ஜலத்தை ரசமோ, குழம்போ கொதிக்கும் போது சேர்க்கலாம்.
வெந்த பருப்புடன் வெல்லம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்
                                                   
 அரைத்தவிழுதை பெரிய கடாயில் போட்டு கை விடாமல் கிளறவும். அரைத்த கலவை சிறிது  நீர்க்க  லூசாக இருக்கும். கடாயில் போட்டு கிளறும் போது
                                   
நன்கு கெட்டி ஆகி விடும்.  ஏலப்பொடி சேர்க்கவும்.நன்கு உருட்டும் பததிற்கு
                                     
வந்ததும் இறக்கி ஆறியதும் சிறு ,சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
                             
கோதுமை மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசைந்து கொள்ளவும்.முதலில் சிறிய சப்பாதியாக இட்டு நடுவில் ஒரு பூரண
                                               
உருண்டையை வைத்து மூடி மெதுவாக வட்டமாக இடவும். அழுத்தம் கொடுக்காமல் இடவும். தோசைக்கல்லில்  போட்டு இரு புறமும் நெய் விட்டு நன்கு சிவந்து வெந்ததும் எடுக்கவும்
                                                     
 சிலர் கோதுமை மாவுக்கு பதில் மைதாமாவு சேர்த்து கைகளால் வாழை இலையில் வைத்து தட்டி பண்ணுவார்கள். மைதாவில் பண்ணும் போளி சூடாக சாப்பிட் மட்டுமே நன்றாக இருக்கும் ஆறிப்போனா ரப்பர் போல இழுக்கும். கோதுமை மாவில் இடுகிற போளி 2,3 நாட்கள் ஆனாலும் மெத்தென்று ஸாஃப்டாகவே இருக்கும்.
                       
                                 

Wednesday, August 15, 2012

மிக்ஸ்ட் பொரியல்/

வாரக்கடைசியில் எல்லா காய்களும் கொஞ்சம் கொஞம் மீந்துவிடும். அம்மா வீட்ல அந்த சமயங்களில் அவியலோ, பொரிச்ச குழம்போ செய்வார்கள். நம்ம பசங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது. அதனால பொரியலாகத்தான் செய்யனும்.
  தேவையான பொருட்கள்
                                                       
கேரட்----------------   4
உருளைக்கிழங்கு-------   2
பச்சை பட்டாணி--------  ஒரு கப்.
குடை மிளகாய்=---------   2
மஞ்சப்பொடி-------------  அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி----- ஒரு ஸ்பூன்
கரம் மசாலா பொடி---------ஒருஸ்பூன்
உப்பு---------- தேவையான அளவு
காரப்பொடி---------- ஒரு ஸ்பூன்
 எண்ணை----------- 2ஸ்பூன்

செய் முறை
                                                   
காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிசாக அரிந்து கொள்ளவும்.
                 
 கடாயில் 2 ஸ்பூன் எண்ணை  ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும்
                                                 
காயகளைச்சேர்க்கவும். நன்கு வதக்கவும்.  மேலே ஒரு தட்டுபோட்டு மூடி அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வைக்கவும். இப்படி செய்வதால் காய்கள்
                                                 
அடிப்பிடிக்காமல் கலர் மாறாமல் இருக்கும். பாதி வெந்ததும் மஞ்சபொடி ,காரப்பொடி கரம் மசால பொடி உப்பு எல்லாம் சேர்க்கவும்.கொஞ்ச
                                         
நேரத்திலேயே நன்கு வெந்து விடும். நான் ஸ்டிக் கடாயில்ச் செய்தால் எண்ணை குறைவாக சேர்த்தால் போதும்

Monday, August 13, 2012

சுலபதக்காளி சட்னி

தேவையான பொருட்கள்.
 நன்கு பழுத்த தக்காளி பழங்கள்----------------- 4
 பச்சை மிளகாய்--------------------------------------  2
                                                           
உப்பு-------------------------------------------------- தேவையான அளவு
 செய் முறை
 தக்காளிகளை நகு கழுவி நான்காக கட்செய்து கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். ஒரு பௌலில் போட்டு மைக்ரொவேவ் ஓவனில்
                                         
ஹை பவரில் 3- நிமிஷனகளுக்கு வேக வைக்கவும். நன்கு ஆறியதும்  உப்பு
                                               
சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.சுவையான தக்காளி சட்னி
                                             
நிமிஷத்தில் ரெடி. எண்ணையோ தேங்காயோ எந்த கொழுப்பு பொருட்களும் சேர்ப்பதில்லை. தாளிப்பு கூட கிடையாது. இட்லி, தோசை சப்பாத்தியுடன் நல்லா இருக்கும்
                                         
                                            

Friday, August 10, 2012

வள்ளியூர்



வள்ளியூர்தான் என் அம்மா ஊரு. கல்லிடைக்குறிச்சி அப்பா ஊரு. நான் பிறந்ததுமட்டும் வள்ளியூர்.வளர்ந்ததுஎல்லாமகல்லிடையில்தான்.அம்மாவின் அப்பா,அவங்க அப்பா என்று தலை முறை தலை முறையாக வள்ளியூரில் கிராம முன்சீப்பாகவும், சிவன்கோவில் தர்மகர்த்தாவாகவுமிருந்து வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் ஆடி முதல்வெள்ளியன்றும்பெரிதாக கொடைவிழா எல்லாம் சிறப்பாக நடத்துவார்கள்.சிவன்கோவில்என்றால் சிவனை எல்லை சாமியாக ஸ்தாபிதம் பண்ணி பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க.
                 
அம்பாளுக்கு இசக்கி அம்மன் என்னும் பேரு, ஆண்டவருக்கு சுடலை ஆண்டவர்னு பேரு.வள்ளியூரில் அந்த சமயத்தில் அதாவது ஒரு 50, 55- வருடங்களுக்கு முன்னெல்லாம் கீழத்தெரு, மேலத்தெருன்னு ரெண்டே தெருக்கள்தான் இருந்தது. சின்ன ஊருதான். கன்யாகுமரி, நாகர்கோயில் பக்கம் இந்த ஊரு இருக்கு. அம்மகூட பிறந்தவங்க 12பொண்ணுஒரேஒரு பையன்.(அப்பாடா????????????). அம்மாவ்ழி குடும்பத்தினர் எல்லாரும் எந்த ஊர்களில்
 இருந்தாலும் இந்தக்கொடை விழாவில் வந்து கலந்துப்பாங்க. தாத்தாபாட்டி வீடு கீழத்தெரிவில்இருந்தது. பழயகால முறைப்படி, வாசல் திண்ணை, நடை ,ரேழி,கூடம் அடுக்களை, தாவாரம், பட்டாசாலை,கொல்லைப்புறம் என்று ரயில் கம்பார்ட்மெண்ட் போல நீளமாக இருக்கும். அம்மாவின் கூடப்பிறந்தவங்க எல்லாருமே பெணகள் அதிகமில்லியா அவங்க குழந்தைகளும் ஒவ்வொருவருக்கும்7, 8 க்கு குறையாம இருக்கும். என்கூட பிறந்தவங்களும் 7 பேரு. எல்லாரையும் அந்தவீடுதாங்காது. அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலும் பாதிபேரு தங்கிப்போம்.


அப்பல்லாம் அங்க யாரு வீட்டிலும் குளிக்க பாத்ரூமோ, டாய்லெட்டோ கிடையாது. கோவில்குளத்துலதான் எல்லாரும் குளிக்கபோகனும். வயல் வெளிகளில்தான் காலைக்கடன்கள் கழிக்கனும்
(இதுனாலயே எனக்கு அந்த ஊருக்கு போகப்பிடிக்காது.) வயக்காட்டுல பன்னிகள்வேறு கூட்டமாவந்து நம்மை ஓடஓட விரட்டிகிட்டே இருக்கும்.( ஹா ஹா).வீட்டில் ஒரேபொம்பிள்ளைகள் கூட்டமாஇருக்குமா சோப்பு வாசனை பவுடர் மணம் பூக்களின்மணம் என்று கலவையான மணங்கள் மூக்கில்
 வந்துவீசிக்கொண்டே இருக்கும். பூஜை ரூமிலிருந்து விளக்கு எரியும் நெய்யின் வாசனை ஊதுபத்திசாம்பிராணி, தசாங்கவாசனைகள் வீடுபூரா நிறம்பி இருக்கும் ஒரேபுகை மூட்டமா இருக்கும். பெரிய
வீடே தவிர எல்லாரூமும் இருட்டாகவே இருக்கும். லைட் எப்பவும் எரிந்துகொண்டே இருக்கனும்.அடுக்களையில் இருந்து இட்லி, சாம்பார் சட்னிமணம் சமையல் மணம் எல்லாம் கலந்துகட்டி வரும்.

ஒருகல்யாண வீடுபால கலகல்ப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். எல்லாரு நலம் விசாரித்து சிரித்துபேசிஎன்று நல்லாவே ரிலாக்ஸ் ஆயிடும்.இதெல்லாம் நல்லாதான் இருக்கும்.. வெள்ளிக்கிழமை கொடைவிழா
என்றால் நாங்க எல்லாருமே அதாவது வெளி ஊரில் இருந்து வருபவர்கள் வியாழக்கிழமை காலை போயி சேருவோம் அதுக்கும் முன்பே கால் நாட்டு விழா எல்லாம் நடத்தி இருப்பாங்க. அதுக்கு பக்கத்துஊர்களில் இருப்பவங்க போயி கலந்துப்பாங்க. கொடைவிழா பத்திரிகை எல்லாம் ஒருமாசம் முன்பே
எல்லாருக்கும் அனுப்பி இருப்பார்கள்

கொடை அன்று காலைமுதலே களைகட்டும். கீழத்தெருவில் இருந்து குழந்தைகள் பால்குடம் எடுத்து ஆடிக்கொண்டே கோவில் வரைபோவார்கள். கூடவே நாதஸ்வரம் மேளம் பாட்டுக்கள். சாமிக்கு பூஜைகள் பெண்கள்
                   
மாவிளக்கு ஏற்றி வழிபட்டு, சாமிக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம்
                                               




எல்லாம் சிறப்பாக நடத்துவார்கள்.என்   அம்மா குடும்பதில் அம்மா கூடப்பிறந்தவங்கள் எல்லாருக்கும் சாமி அருள் வரும். எல்லாரும் சாமி ஆடி பக்தர்களுக்கு அருள் வாக்கெல்லாம் சொல்வார்கள்.பெரியம்மா பெண் லண்டனில் இருந்து இந்த கொடைவிழாவில் கலந்துகொண்டு சாமி ஆடுவார்கள். பூரா நாளும் கொட்டும் மேளமும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
                                       
கோவில் வாசலில் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் என்று கிராமிய கலை விழாக்கள் அமர்க்கள்மாக இருக்கும்.

ஊரே திருவிழாகோலம் கொண்டு உற்சாகமாக இருக்கும்.இந்தக்கோவிலில் பிராமின்சும், நான் பிராமின்சும் கலந்துதான் இந்த கொடைவிழா தலை முறை தலைமுறையாக நடத்தி வருகிரார்கள். சாயந்தரம் வில்லுப்பாட்டில் சுடலை ஆண்டவர் கதை விஸ்தாரமாக சொல்லுவார்கள்.கூட்டம் நிறம்பி வழியும். இதெல்லாம் ஓக்கேதான். நானும் என் கூடப்பிறந்தவங்களும் பிறந்தவீட்டில் இருந்தவரையிலும் இந்த விழாவில் கலந்துகொண்டு பால்குடம்லாம் எடுத்திருக்கேன். கல்யாணமான பிறகு போக வாய்ப்பு கிடைக்காம போச்சு.ரொம்ப வருடங்களுக்குப்பிறகு என் வீட்டுக்காரருக்கு அந்தக்கொடைவிழாவில் கலந்துகொள்ள னும்னுதோனிச்சு. அப்புரம் வருடா வருடம் அவர்கூட போனேன். அவருக்கு அந்த சாமி மேல கண்மூடிதனமான நம்பிக்கை இருந்தது.

  நானும் வந்துதான் ஆகனும்னு சொல்லிடுவார்.எனக்கு அவ்வளவா விருப்பமில்லே. அங்க ஆடு கோழில்லாம் பலி கொடுப்பாங்க. அது எனக்கு பிடிப்பதில்லே. அந்த சாமியை கோவக்காரசாமியாக அதாவது  பார்வதியைப்பிரிந்து சுடலையில் கோவமாக ஆடும் சாமியாக பிரதிட்ட்டை பண்ணினதால அவரை சாந்தப்படுத்த இந்தபலில்லாம் கொடுத்துதான் ஆகனும்னு ஒரு நம்பிக்கை. அந்த ஜனங்களுக்கு.வழி வழியாக செய்து வந்தபழக்கத்தை ஒரு பெரியவர் சொன்னார் என்று ஒருமுறை பலி கொடுக்காமல் விழா பண்ணினார்கள். சொல்லி வைத்தமாதிரி தாத்தா, குடும்பம் அவங்க கூடப்பிறந்தவங்க குடும்பத்தில் சின்னவயசு குழந்தைகள் 21 பேர் இறந்துட்டாங்க. இது சாமி குத்தம்தான்  நாம வழக்கம்போல ஆடு கோழியே பலி கொடுத்துடலாம் என்று வருடாவருடம் அதையே செய்து வருகிரார்கள்.

பகல் நேரம் பூராவும் சாமிக்கு மாவிளக்கு, சக்கரைப்பொங்கல் எல்லாம்
                                                 
நைவேத்தியம் பண்ணுவார்கள். இரவு கரெக்டாக சாமி ஆடி ஆவேசம் வந்து சுடுகாட்டுக்குப்போயி அங்கு சாம்பலில் புரண்டு ஆடிட்டு பெரிய கிண்ணம் நிறையா சுடுகாட்டு சாம்பலை(எலுபுதுண்டுகளும் இருக்கும் அதில்)எடுத்து தெரு பூராவும் ஆவேசம் வந்து ஆடிட்டே வருவார். வழியில் பக்தர்கள் அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பார்கள். அவர்களுக்கெல்லாம் விபூதி கொடுப்பார். அதில் கல்ந்திருக்கும் எலும்புதுண்டுகள் யாருக்கெல்லாம் கிடைக்கிரதோ அவங்கல்லாம் அதை பயபக்தியுடன் வீட்டில் ர்க்‌ஷைபோல வச்சுப்பாங்க.இரவு நான் பிராமின்ஸ் படப்புதீபாராதனை என்று ஆடுகோழியைவச்சுதான் சமைச்சு சாமிக்கு படையல் போடுவாங்க.அந்தப்பிரசாதம் வாங்க நிறைய நான் பிராமின்ஸ் கூட்டமாக தூக்கு வாளில்லாம் வச்சுண்டு வரிசையில் நின்னு வாங்கி போவாங்க.

கொடைவிழா நடக்கும் இந்த நேரங்களில்தான் அந்த சாமிக்கு பந்தல் அலங்காரம் பூஜை அபிஷேகம் எல்லாமிருக்கும். பாக்கி 11 மாசமும் வெயிலிலும் மழையிலும்தன்ன் நனஞ்சுட்டு இருப்பார். பலதடவை கூரை போட்டு பார்த்தாங்க அது எப்படியோ இடிஞ்சு விழுந்துகிட்டே இருந்தது. அப்புஅரம் அப்படியே விட்டுட்டாங்க.

இந்த விஷயத்தை அந்த ஜனங்களின் முறட்டு பக்தின்னு நினைக்கவா,மூட நம்பிக்கைன்னு நினைக்கரதா தெரியல்லே. ஆனாகூட அவங்கவங்க நம்பிக்கைகளை யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது இல்லியா? நமக்கு விருப்பமில்லேனா ஒதுங்கி போயிடனும். என் வீட்டுக்காரர் இறந்து போயி 13 வருஷமா நான் அந்த ஊரு பக்கம் போரதே இல்லே.மத்த சொந்தக்காரங்கல்லாம் போயி கலந்துக்குராங்கதான்.

Monday, August 6, 2012

பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்
 பீன்ஸ்----------------------  1/4 கிலோ
 துவரம் பருப்பு------------  150 கிராம்
 மிளகா பொடி------------- ஒரு ஸ்பூன்
 மஞ்ச பொடி-------------- அரை ஸ்பூன்
 பெருங்காய பொடி------- ஒரு ஸ்பூன்
 உப்பு-------------------------- தேவையான அளவு
 எண்ணை------------------ ஒரு பெரிய கரண்டி
 கடுகு------------------------ ஒரு ஸ்பூன்
 உளுத்தம் பருப்பு--------- ஒரு ஸ்பூன்
 கறி வேப்பிலை---------- ஒரு ஆர்க்
 செய் முறை
                                           
 பீன்ஸை பொடிதாக அரிந்து கொண்டு தனியாக மலர வேக வைத்து தனியாக வைக்கவும். பருப்பு, பொடி வகை கள் எல்லாம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.கடாயில் எண்ணை ஊற்றிகடுகு போட்டு பொரிந்ததும் உளுந்தம்பருப்பு போட்டு சிவந்ததும் அரைத்த பருப்பு
                                       
விழுதைப்போட்டு கைவிடாமல் கிளறவும். நன்கு உதிராக வந்ததும் வெந்த
                                     
பீன்ஸைப்போட்டு நன்கு கிளறவும். பருப்பு கலவையும் காயும் சேர்ந்து
  வெந்ததும் இறக்கவும். எண்ணை சேர்க்க பிரியப்படாதவர்கள் அரைத்த பருப்பு விழுதை இட்லி வேக வைப்பது போல ஸ்டீமில் வேக வைத்து உதிர்த்துக்கொண்டு காயைப்போட்டு வதக்கவும்.


Friday, August 3, 2012

மும்பை லோக்கல்

ஒரு 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். மும்பையில் மலாடில் இருக்கும் என் தங்கை வீட்டில் வரலக்‌ஷ்மி நோன்பு இருந்தது. அதுல கலந்துக்க நாங்க  அதாவது நான் மற்ற சொந்தக்காரங்க எல்லாரும் போயிருந்தோம். நோன்புக்கு அடுத்த நாள் என் சின்ன தங்கையின் பையனுக்கு முதல் ஆண்டு நிறைவு இருந்தது. நாங்க ஒரு 13- பேரு ஆண்களும் பெண்களுமாக கிளம்பினோம்.ஆண்கள் தனியா 6-பேருக்கு டிக்கட் எடுத்து ஒருவர் கையில் கொடுத்தாங்க. அதுபோல பெண்களிலும் மொத்தமாக டிக்கட் எடுத்து ஒருவர்கையில் வச்சு கிட்டாங்க. மும்பையின் வெஸ்டர்ன் ரயில்வேயில் இந்த இடங்கள் இருக்கு. அங்க எப்ப பார்த்தாலும் கூட்டம் நிறம்பி வழியும்.லோக்கலும் ஃபுல் கூட்டத்தோட வந்து நின்னது. இறங்கற கூட்டம் ஏற்ரவங்களை ஏற் விடாம தள்ளி அடிச்சுட்டு இறங்குது. எப்படி யோ அவங்கல்லாம் இறங்கின பிறகு ஏறுர கூட்டம் முண்டி அடிச்சு ஏறினாங்க. நான் முதல்ல நின்னிண்டு இருந்தேன். அதனால நான் முதல்ல வண்டில ஏறிட்டேன். பாம்பே லோக்கலில் ஏறி இறங்க ஒரு தனி சாமர்த்தியம் வேனும் அதெல்லாம் என்கிட்ட சுத்தமா கிடையாது. மத்தவங்க ஏறினாங்களா இல்லையான்னு திரும்பிகூட பாக்க முடியல்லே அவ்வளவு கூட்டம்.
                             






 மததவங்களால வண்டில ஏற்வே முடியல்லே நான் மட்டுமே ஏறி இருந்தேன்னு வண்டி கிளம்பின பிறகுதான் தெரிஞ்சது. என் பெரியபெண் அம்மா பாண்ட்ராவில் இறங்கிடுன்னு கீழேந்து கத்தினா. எனக்கு வெஸ்டர்ன் ரயில்வேல போயி பழக்கம் இல்லே பாண்ட்ரா எத்தனாவது ஸ்டேஷன்னும் தெரியல்லே. என்கையில் டிக்கட்டோ பணமோ கூட இல்லே இப்ப உள்ள செல்போன் வசதில்லாம் அப்போ வந்திருக்கலே யாரையும் காண்டாக்ட் பண்ணவும் முடியல்லே.. மனசு பூரா பக் பக்குனு இருந்துச்சு  மலாட் தாண்டினதுமே பக்கத்தில் உள்ளவங்களிடம் பாண்ட்ரா எப்ப வருனு கேட்டேன் அவங்க என்ன பாத்து கேலியா சிரிக்குராங்க. இப்பதான் மலாட் விட்டு கிளம்பி இருக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னாங்க உக்கார கூட இடம் கிடைக்கலே எண்ட்ரன்ஸ்கீட்டயே ஸ்டாண்டிங்க் தான். ஒவ்வொரு ஸ்டேஷனா பேரு பாத்துகிட்டே வந்தேன் ஏறுர கூட்டமும் இறங்குர கூட்டமும் என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க. ஒரு வழியா பாண்ட்ரா ஸ்டேஷன் வந்ததும் கூட்டத்தோட கூட்டமா நானும் இறங்கிட்டேன். சுத்தி பாத்தா எங்க சொந்தக்காரங்க யாருமே இல்லே. டி, டி பிடிச்சுட்டார்னா என்ன பண்ணனு ரொம்ப பயம்மா இருந்துச்சு.என் கையில டிக்கட் இல்லியே. அடுத்த வண்டியில் ஆண்கல் எல்லாரும் வந்துட்டாங்க, நான் தனியே நிற்பதைப்பார்த்து மத்தவங்கல்லாம் எங்கன்னு கேக்குராங்க. அவங்களிடம் சொன்னேன். சிரிக்குராங்க எனக்கு கோவமா வந்தது. அதுக்கும் அடுத்தவண்டில லேடீஸ் எல்லாரும் வந்துட்டாங்க. ஒவ்வொரு 2- நிமிஷத்துக்கும் வண்டி இருந்தது நல்லதாச்சு.

அம்மா பத்திரமா இறங்கினயா எதுவும் ப்ராப்லம் ஆகலியேன்னு கேக்குராங்க. அப்புரம் எல்லாரும் சேந்துபோயி பர்த் டே ஃபங்க்‌ஷ்ன்ல கலந்துகிட்டு மறுபடி மலாட் வந்தோம் பர்த் டே ஃபங்க்‌ஷன் மட்டுங்கா என்னும் இடத்தில் இருந்தது. இரவு பூராவும் இது பத்தியேதான் பேச்சு அப்பலேந்து நான் எங்க கிளம்பினாலும்  யாரு கூட கிளம்பினாலும்ஒரு 100- ரூபாயாவது கையில் தனியா எடுத்துண்டு போயிடுவேன் இதுவும் ஒரு பாடம்தான் இல்லியா

Wednesday, August 1, 2012

அரைச்சு கலக்கி

தேவையான பொருட்கள்.

த்யிர்----------------------   2 கப்(புளிப்பில்லாதது)
துருவிய தேங்காய்---------- ஒரு மூடி
ஊற வைத்திருக்கும் வடு மாங்காய்கள் -----------   8
பச்ச மிளகாய்-------------------------    2   (நான் 4 சேர்த்திருக்கேன்)
உப்பு-------------------  ரொம்ப கொஞ்சம்.
                                         
 தாளிக்க
தேங்கா எண்ணை---------   1 ஸ்பூன்
கடுகு----------------------  1 ஸ்பூன்
 வெந்தயம்---------------- 1/2 ஸ்பூன்
 கறி வேப்பிலை --------- ஒரு ஆர்க்.
 சிவப்பு மிளகாவத்தல்---------- 2
செய் முறை
                                                           
தேங்கா, மாங்கா பச்சை மிளகாயை மிக்சியில் நைசாக அரைத்து தயிரில் கலக்கவும். எண்ணையில் கடுகு வெந்தயம், கருவேப்பிலை 2 சிவப்பு மிளகா தாளிக்கவும். சூடு பண்ண தேவையில்லே. அப்படியே உபயோகப்படுத்தலாம்.
                                                 
இந்தக்குழம்பு நாங்க அரைச்சு கலக்கின்னுதான் சொல்வோம். ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு பேர் சொல்வாங்க அதில் வேடிக்கையா அம்மாஞ்சி குழம்புன்னும் சொல்வாங்க ஏன் அந்தப்பெயர் வந்ததோ தெரியாது.மாங்காயில் ஏற்கனவே உப்பு இருப்பதால் உப்பு குறைவாக சேர்க்கவும்.
                                                             

என்னை ஆதரிப்பவர்கள் . .